Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடும்பத்துடன் இன்ப சுற்றுலா” சுழலில் சிக்கி இறந்த தொழிலதிபர்…. கோவையில் பரபரப்பு…!!

ஆற்றில் மூழ்கி தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் மன்சூர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத் நாட்டில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மன்சூர் வெளிநாட்டிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மன்சூர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினர் சோலையாற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மன்சூர் சூழல் உள்ள ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுழலில் சிக்கிய மன்சூர் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இதனால் மன்சூர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு மன்சூரின் உடலை மீட்டனர். அதன்பிறகு மன்சூரின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |