வியாபாரி வீட்டில் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடுகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயமாருதி நகரில் பழைய இரும்பு வியாபாரியான மகபூப் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகபூப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.