Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது…. ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயம்…. தேடும் பணி தீவிரம் …!!!

கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயமானார்.

சென்னை மாவட்டம், எண்ணூர் காமராஜர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ஆசிப்(22). இவர் வீடுகளுக்கு பால்சீலிங் போடும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 18ஆம் தேதி மாலை தனது குடும்பத்துடன் தாழங்குப்பம் அருகில் கடலில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக கடலில் தோன்றிய ராட்சத அலை முகம்மது ஆசிப்பை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

உடனே பக்கத்தில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து முகம்மது ஆசிப்பை தேடிப் பார்த்தார்கள். ஆனாலும் முகமது ஆசிப் கிடைக்கவில்லை. அவர் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ராட்சத அலையில் சிக்கிய வாலிபரை தேடி வருகிறார்கள்.

Categories

Tech |