ரஷ்ய துருப்புக்கள், உக்ரேனிய பெண் மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசியதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார். கீவ் அருகே உள்ள Motyzhyn நகர மேயர் Olga Sukhenko-வே குடும்பத்துடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமான AP கூறியுள்ளது. ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் கணவர் மற்றும் மகனுடன் Olga Sukhenko சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாவது, Motyzhyn நகரம் முழுவதும் உள்ளூர் அதிகாரிகளை குறிவதை்த ரஷ்ய படைகள், தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கதாவர்களை கொலை செய்தனர்.மேயர்olga sukhenko மற்றும் அவரது குடும்பத்தை சுற்று கொண்ட ரஷ்ய துருப்புகள் காட்டுப் பகுதியில் உள்ள குழியில் வீசி சென்றிக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.
மார்ச் 23ஆம் தேதி குடும்பத்தினருடன் மேயர் olga sukhenko ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்டார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவர் கொல்லப்பட்ட செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. Motyzhy மேயர் கொல்லப்பட்டதை உக்ரேனிய துணை பிரதமர்Iryna vereshchuk உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் உக்ரைனில் ரஷ்ய போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.