Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது… ராணுவவீரருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற முன்னாள் ராணுவ வீரர் வைகை அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வியகுமார் என்பவர் தனது மனை புவனேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உள்ள வைகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பூங்கா போன்றவற்றை பார்த்து விட்டு வைகை அணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது வைகை அணையில் உள்ள 58ஆம் கால்வாய்க்கு செல்லும் மதகு பகுதியில் விஜயகுமார் மற்றும் தனியாக குளிக்க சென்றுள்ளார்.

இதனையடுத்து ஆழமான பகுதிக்கு சென்ற விஜயகுமார் சிறிது நேரத்தில் தண்ணீர்ல் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய விஜயகுமாரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயகுமார் ஏற்கனவே உய்ரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்து சென்ற வைகை அணை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |