செந்தில் – ராஜலக்ஷ்மி ஜோடிகள் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.3
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தங்கள் பக்கம் இழுத்துள்ள ஜோடிகள் செந்தில் – ராஜலட்சுமி. நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தும் இந்த ஜோடிகள் மக்களின் மத்தியில் மிகுந்த பிரபலமாகியுள்ளது. இவர்கள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி வருகின்றனர். எப்போதும் புடவையிலேயே கலக்கும் ராஜலட்சுமி கூட மாடர்னாக மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இருவரும் குடும்பத்தோடு சேர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இருந்தாலும் கொரோனா நேரத்தில் இப்படி தைரியமாக குடும்பத்துடன் செல்வதற்கு தைரியம் தான் என்று நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.