Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்…. வெளியான புகைப்படம்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரபாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் 60-100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

இந்நிலையில் இந்த சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று (டிச..12)நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்திருந்தார். இதையடுத்து கோ பூஜை, கஜபூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தியும் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

Categories

Tech |