நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் வாகா எல்லைக்கு சென்றார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 கோடி வரை வசூல் செய்தது.
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் அல்லு அர்ஜுன் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டியின் பிறந்த நாளையொட்டி அமிர்தசரஸில் இருக்கும் பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து அங்கிருந்து அட்டாரி எல்லை பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு அவர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் அதிகாரிகளும் வரவேற்றார்கள். பின் அவர்களுக்கு அங்கிருக்கும் இடங்களை சுட்டிக்காட்டினார்கள். அல்லு அர்ஜுன் அங்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் பலர் திரண்டார்கள். அவர்களைப் பார்த்து கை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார் அல்லு அர்ஜுன்.