Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தை காவு வாங்கிய மது…. பறி போன மூன்று உயிர்… கேரளாவில் சோகம்….!!!

மதுப்பழக்கம் கொண்டவரால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் குண்டற பகுதியில் வசிப்பவர்கள் சிஜூ-ராகி தம்பதியினர். சிஜு தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஆதி என்ற மகன் இருந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிஜூ, தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் வந்த சிஜூ தன் மனைவியை தாக்கியதால், விரக்தியடைந்த ராகி தன் மகனோடு வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில் திடீரென ராகியின் தந்தை தன் மகளை தேடி வந்த போதுதான் அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையினரின் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தாயும் மகனும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த நிலையில் சிஜூ தன் மனைவி மற்றும் மகனின் மரணத்தால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தில் உள்ள 3 பேரும் உயிரிழந்த சம்பவதால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |