Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை குறி வைத்து தாக்கிய கொரோனா… வீட்டிற்கு அதிரடி “சீல்”… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. இதில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. மேலும் அவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து சுகாதார துறையினர் அவர்கள் 6 பேரும் வசித்த வீட்டை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்தனர். அதன்பின் அந்த வீட்டுக்கு “சீல்” வைக்கப்பட்டது. கொரோனா சோதனை அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தங்கதுரை தலைமையில் கபசுர குடிநீர் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு குறித்து ஊழியர்கள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதி மக்களை கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |