Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“குடும்பத்தை பற்றிய கவலை” பெண் கைதி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண் கைதி சிறையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் சசிகலா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசிய குற்றத்திற்காக சத்யா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சத்யாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சத்யாவிற்கு மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு திடீரென சத்யா மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் சிறை ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தை நினைத்து மன உளைச்சலில் இருந்த சத்யா தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |