Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது…. ஓ.டி.டியை விட தியேட்டர் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்…. என்ன சொல்கிறார் டாப்ஸி!!

ஓ.டி.டி யில்  படங்கள் பார்ப்பதை விட திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்கே ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.. டாப்ஸி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கும் டாப்ஸி சினிமா அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்..

அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவிற்கு நான் வந்த புதிதில் லவ் காட்சிகளிலும், பாடல் பாடி டான்ஸ் ஆடும் காட்சிகளிலும் நடித்தேன். இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கின்றேன். தயாரிப்பாளராகவும் நான் இப்போது  மாறியிருக்கிறேன். ஒரு ஹீரோயினாக இருப்பது எளிது. சூட்டிங்கிற்கு சென்று நடித்தோம், பின் வீட்டுக்கு வந்தோம் என்று இருக்கலாம்.

ஆனால் தயாரிப்பாளர் அப்படியில்லை.. படப்பிடிப்பை நாள்தோறும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். படத்தை நல்ல தரமாக எடுக்கின்றார்களா? என்று பார்ப்பது மட்டுமில்லாமல்  பட்ஜெட்டுக்குள் படப்பிடிப்பு நடக்கிறதா? என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மேலும் பேசிய அவர், தயாரிப்பாளரான பின் எனக்கு அதிக பொறுப்பு வந்திருக்கிறது.. ஓ.டி.டி யில்  படங்கள் பார்ப்பதை விட திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்கே ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஓ.டி.டியில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை கிடையாது என்பதால் சில தவறான காட்சிகளும் அதில் இடம்பெறுகின்றன. எனவே அவற்றை குடும்பத்தோடு சேர்ந்து பார்ப்பதில் சிரமம் ஏற்படும். திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவமே  மிகச்சிறந்தது.

சமூகத்தில் பெண்களை நீ அங்கே போகாதே, அதையெல்லாம் செய்யாதே என்று சொல்லி கட்டுப்பாடு விதித்து  வளர்க்கிறார்கள். அந்த அறிவுரைகளை ஆண்களுக்கும் அவர்கள் சொல்லி வளர்த்தால் பெண்களுக்கு கஷ்டம் என்ற ஒன்று வரவே வராது” என்று கூறினார்..

Categories

Tech |