நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் சிவகார்த்திகேயன் என்பவர் வசித்து வந்தார். தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி பரணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட சிவகார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.