Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…. சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் புகார்…. சென்னையில் பரபரப்பு….!!!

பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் அமைந்தகரையில் உள்ள பிபி தோட்டம் பகுதியில் என்ஜினியராக வேலை பார்க்கும் கலைவேந்தன் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கலை வேந்தனுக்கும், அம்பத்தூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், பிரியதர்ஷினி மதுரவாயிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி நேற்று முன்தினம் திடீரென இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கலைவேந்தன் அமைந்தகரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கலைவேந்தன் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

ஆனால் பிரியதர்ஷினி பெற்றோர் கலைவேந்தனுக்கும் தங்கள் மகளுக்கும் திருமணம் ஆன சில மாதங்களில் இருந்தே பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் என்னுடைய மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் பிரியதர்ஷினியின் தற்கொலையை சந்தேக மரணம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |