Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000…. என்னம்மா இப்படி பண்றிங்களேமா…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தது. திமுக கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு இதுவரை அதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

அதுமட்டுமில்லாமல் குடும்பத் தலைவிகளின் பெயர்களில் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வதந்தியை நம்பி, ரேஷன் கார்டுகளில் ஆண்களின் பெயர்களை நீக்கிவிட்டு குடும்பத்தலைவிகளாக இல்லத்தரசிகளின் பெயர்களை பதிவு செய்ய பெண்கள் இ-சேவை மையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன. அவற்றை நம்பி, தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதத்தில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர், ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

இதற்காக, வட்டார வழங்கல் அலுவலர் அலுவலகம் மட்டுமின்றி இ-சேவை மையங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டுமின்றி, ரேஷன் அட்டைகளின் வகைகளை மாற்றவும், பொதுமக்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் இணையதளம் முடங்கியது மட்டுமல்லாமல், புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு வழங்குவது காலதாமதமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள் மக்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது முறையான அறிவிப்பு வெளியாகாத நிலையில் வதந்திகளை நம்பி மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் தொடர்பாக ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்காக அரசு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |