Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு….. “கை தேடி வரும் மாதம் 1,000 ரூபாய்”….. செம ஹேப்பி நியூஸ்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2021-ல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக நிதித் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலைமை மேம்படும் போது கட்டாயம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்றத் திமுக குழு தலைவர் டி ஆர் பாலு பேசியதாவது: “இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போதும்  பீனிக்ஸ் பறவை போல மீண்டும் ஆட்சி அமைத்த பெருமை கருணாநிதியை சேரும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட 505 தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு ஆண்டில் 320 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரம் ரூபாய் தரவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 தரமாட்டோம் என்று எங்கேயும் நாங்கள் கூறவில்லை. இன்னும் 4 ஆண்டுகள் மிச்சம் உள்ளது. அதற்குள் நிச்சயமாக மற்ற அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |