Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் 5 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 2,13,80,112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசு தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது. இதனால் புதிதாக திருமணம் செய்தவர்கள் இந்தத் தொகையை பெறுவதற்காக பலரும் புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்து வருகின்றனர்.

மேலும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தின்போது. ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகளாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவித்தார். இதனால் தமிழக அரசு உரிமை தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தமிழக அரசு இதுகுறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் ரூ.1000 ஊக்கத் தொகை திட்டத்தை விசாரித்தபோது, கொண்ட கடலை வாங்கிய கார்டுகளுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கொண்டகடலை வழங்கப்படாத கார்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது என்று கூறியதாக அண்மையில் செய்திகள் வந்தன.

அதுமட்டுமில்லாமல் தனி நபர் ரேஷன் அட்டைக்கும் உதவித்தொகை கிடையாது என செய்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து ரேஷன் கார்டில் மோசடி ஏற்படுவதை தடுக்கும் வகையில் யார் யாருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு முன்கூட்டியே அறிவிக்க வாய்ப்பில்லை என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |