Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது..? அமைச்சர் வெளியிட்ட விளக்கம்…!!!!!

தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் தியாகராஜன் கூறியபோது, மகளிர் முன்னேற்றம் மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளாக ஆவின்பால் விலை குறைப்பு, சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசு பஸ்களின் இலவச பயணம், போன்ற பல்வேறு வாக்குறுதிகளை முதலமைச்சர் ஏற்கனவே நிறைவேற்றியிருக்கிறார்.

அடுத்த முக்கிய வாக்குறுதியாக மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்ற ஆட்சியினர் விட்டு சென்ற நிதி நெருக்கடி சூழல் காரணமாக இந்த வாக்குறுதியை இந்த அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுள்ள பயனாளிகளின்  பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து அவர்களை சரியாக சென்றடையும் வகையில் திட்டத்தை வடிவமைப்பதற்கான  பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது என்பதை கூற விரும்புகிறேன்.

இதன் அடிப்படையில் இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிலையில் முன்னேற்றம் ஏற்படும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |