குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அரசின் எந்தவித உதவி தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.