Categories
தேசிய செய்திகள்

குடும்பப் பெண்களை கௌரவப்படுத்த…” ஒரு கிராமமே செய்த காரியம்”… போற்றத்தக்க விஷயம்..!!

சத்தீஸ்கரில் உள்ள ஒரு கிராமத்தில் தங்களது குடும்பம் பெண்களின் பெயர்களை தங்களின் வீடுகளுக்கு சூட்டி கவுரவித்து வருகின்றன.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. இதில் 840 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயர்களை வீட்டின் முன்பாக வைத்து அவர்கள் செய்யும் தொழிலைக் குறிப்பிட்டு உள்ளன. இது நடப்பாண்டு மகளிர் தினத்தன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில பஞ்சாயத்து தலைவர் கூறுகையில் “எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்கள் கவுரவிக்கப்படுவர்.  அந்த வகையில் இந்த ஆண்டு ஒவ்வொரு வீட்டில் உள்ள குடும்ப தலைவிகள் பெண்கள் ஆகியோரின் பெயர்களை பலகையில் அச்சிட்டு தங்களின் வீடுகளின் முன்பு அது பொருத்தப்பட்டுள்ளது. இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்று கூறினார்.

Categories

Tech |