Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பம் தான் பெருசு… வீட்டில் ஒருவருக்கு பொறுப்பு… திமுகவை வச்சு செய்த எடப்பாடி …!!

தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ளார். நேற்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த முதலவர், திமுகவை கடுமையாக தாக்கினார். அவர் பேசும் போது, திமுக நாட்டு மக்களை எண்ணி, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருந்தால் நாட்டு மக்கள் உள்ளத்திலே நீங்கள் இருப்பீர்கள்.

பொன்மலைச் செம்மல் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, அந்த வழியில் நடைபெறுகின்ற அம்மாவுடைய அரசு நாட்டு மக்களை  எண்ணிப்பார்த்து திட்டங்களை கொடுத்து அதன் மூலமாக நாட்டு மக்கள் நன்மை பெற்றார்கள், இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

எப்பொழுது பார்த்தாலும் அவருடைய குடும்பம் தான் பெருசா நினைப்பார்கள், அது ஒரு கட்சி இல்லை, அது ஒரு கம்பனி. திமுக என்கிறது ஒரு கம்பனி. அதுக்கு சேர்மன் ஸ்டாலின்.இயக்குனர் உதயாநிதி, கனிமொழி, தயாநிதி. இவர்கள் தான் திமுக கம்பெனியின் இயக்குனர்கள்.

இவர்கள் தான் தமிழ்நாடு முழுவதும் சுத்தி சுத்தி வருவாங்க. வேற யாரையும் விட மாட்டாங்க. குடும்பத்துல இருப்பவர்கள் தான் கட்சியிலயும் பதவியில் இருப்பாங்க, ஆட்சிக்கு வந்தா அதிகாரத்துக்கும் அவர்கள் தான் வருவார்கள். வேற யாரும் வர விடமாட்டார்கள்.

இப்படி குடும்ப ஆட்சி நடத்துகின்றவர்களை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? வருகின்ற சட்டமன்ற  பொது தேர்தல் மூலமாக வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டம் தேர்தலாக இளைஞர் பட்டாளம் ஒன்று இணைந்து செயல்பட்டு வெற்றிக்கனி ஈட்டி தாருங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் என தமிழக முதல்வர் வலியுறுத்தினார்.

Categories

Tech |