Categories
சினிமா தமிழ் சினிமா

“குடும்பம் தான் முதலில்” மற்றதெல்லாம் அப்புறம் தான்…. விஜய் அறிவுரை…!!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்தார். கடந்த மாதம் நிர்வாகிகளை சந்தித்த அவர் ஒவ்வொரு மாதமும் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என உறுதி தெரிவித்தார். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். வாரிசு படம் வெளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது.

சென்னை பனையூரில் நடந்த சந்திப்பில் நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்கள் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் பற்றி அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் பிறகு தான் மற்றவை எனவும் அவர்களுக்கு அறிவுரைத்துள்ளார்.

Categories

Tech |