தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொண்டப்பநாயக்கன்பாளையத்தில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் குடும்பம் நடத்த வருமாறு தனது மனைவியை அழைத்துள்ளார்.
அதற்கு அன்னக்கொடி மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்தால் ராஜேந்திரன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த குடும்பத்தினர் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.