Categories
தேசிய செய்திகள்

குடும்ப அடைத்தாரர்களுக்கு குட் நியூஸ்….. புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில்  அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்  54 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றும் மற்ற ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளது.

மேலும் கனமழையின் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர்கள் மற்றும் 25 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. எனவே சேதமடைந்த 25 வீடுகளுக்கும் தலா ரூ.25,000மற்றும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் குடும்ப அட்டைகளுக்கு 5,000 நிவாரணம் வழங்கப்படும். மேலும் மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடமிருந்து இதற்கு உரிய இழப்பீடு கேட்கப்படும்.

அதை தொடர்ந்து கால்நடை உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாடுகளுக்கு ரூ.10,000 மற்றும் ஆடுகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும். மேலும் கனமழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீர் அமைப்பதற்காக ரூ100 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. எனவே மழைக் காலம் முடிந்த பிறகு இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |