தேவைப்படும் ஆவணங்கள்:
குடும்ப தலைவரின் ஆதார் அட்டை.
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்.
குடும்ப தலைவரின் புகைப்படம்.
வயதிற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
நிரந்தர தொலைபேசி எண்.
வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசிது, பாஸ்போர்ட், தொலைப்பேசிக் கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று.
விண்ணப்பிக்கும் முறை:
புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
இதில் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்க.
பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள அளவில் உங்களது புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.(Image Size: 5.0 M.B)
பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவேற்றவேண்டும். தொடர்ந்து கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
உங்களிடம் உள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து முன்கூட்டியே வைத்துக்கொள்வது நல்லது.
ஸ்டார் குறியிடப்பட்ட அனைத்து தரவுகளையும் பதிவிடவேண்டும்.
பின்னர் சமர்ப்பிக்கவும் பட்டணை அழுத்தி உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
தொடர்ந்து உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு குறிப்பு எண் வரும். அவற்றைக் கொண்டு மீண்டும் முன்பக்கத்திற்கு சென்று உங்களது விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.