ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவருக்கும் அரசின் சார்பில் ‘மேரா ரேஷன்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொது மக்களுக்காக குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மக்களுக்கு மிகவும் எளிமையாக வகையில் பலவித புதிய அம்சங்களை அரசு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு என்று ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.’மேரா ரேஷன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது என தான் கூறவேண்டும். மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு இந்தத் திட்டத்தின் கீழ் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி நிச்சயமாக புலம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
1. இந்த செயலி இந்தியாவில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
2. இந்த செயலியில் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கும். கூடுதலாக பல மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
3.ஒரு குடும்பத்தின் ரேஷன் அட்டை விவரங்களை கொடுத்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.