அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு eKYC சரி பார்த்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி சம்மான் யோஜனா நிதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதியை பெற வேண்டும் என்றால் eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த செயல்முறையை முடிக்காவிட்டால் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் பிரதான் மந்திரி யோஜனா நிதி திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் விவசாயிகள் pm-kisan இணையதளத்தில் eKYC செயல்முறையை அப்டேட் செய்ய வேண்டும்.
எனவே ஜூன் 15-ம் தேதிக்குள் மாநிலத்தின் அனைத்து நுகர்வோர்களும் நியாயவிலை கடைகளில் eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த செயல்முறையை முடித்துக் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஒவ்வொரு செயல்முறைக்கும் 4 ரூபாய் கொடுக்கப்படும். இது தொடர்பான செயல்முறையை முடிப்பதற்காக மாவட்ட ஊராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த செயல்பாடு தோல்வியடைந்து விட்டால் உணவு மற்றும் வழங்கல் அலுவலரை அணுகலாம்.