நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு பல்வேறு அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மேலும் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிவதை உறுதி செய்யும் வகையில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.7000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.