தமிழகம் முழுவதிலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.