வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மழை, வெள்ள நிவாரணமாக சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், மஞ்சள் அட்டைதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.