புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 மழை நிவாரண தொகையாக வழங்க அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவமழை கொட்டி தீர்த்து வந்தது. இங்கு 2467.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. 1943ம் ஆண்டில் பதிவான 2604 மிமீ மழை பெய்துள்ளது. இன்னும் 137.4 மி.மீ மழை பொழிந்தால் புதுச்சேரி மழை வரலாற்றில் இந்த மழை தான் முதலிடத்தை பெற்றிருக்கும். இதனால் புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வீடுகள், விவசாய பயிர்கள், சாலைகள் என்று 300 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது .
இதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து மஞ்சள் நிற அட்டை தாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இப்பணியை குடிப் பொருள் வழங்கல் துறை துவங்கியுள்ளது . மாநிலத்தில் மொத்தம் 3.65 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன. இவ்வாறு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டால் 182.5 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்படுகிறது. அதன்படி அனைத்து குடும்பத்தினருக்கும் ரூபாய் 5000 நிவாரண தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.