தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல் ‘புழுங்கல் அரிசி’ தலா 2கிலோ வழங்கப்படும் என்று ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘புழுங்கல் அரிசி’ தலா 2 கிலோ வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற பொது விநியோக திட்ட பொருட்களை ஏதேனும் பெற விரும்பவில்லை என்றால் “விட்டுக்கொடுத்தல் திட்டத்தின் மூலம்’ விட்டுக் கொடுக்கலாம்.
அவ்வாறு செய்யாமல் பொது விநியோக திட்ட பொருட்களை நியாயவிலை கடைகளில் பெற்று மூன்றாம் நபருக்கு விற்பனை செய்தால் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை காவலர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மின்னணு குடும்ப அட்டை ‘பண்டகமில்லா குடும்ப அட்டையாக’ மாற்றம் செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் பொது விநியோக திட்ட பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வாங்கும் வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள் மூலம் அரசி உள்ளிட்ட பொது விநியோக திட்ட பொருள்களை கடத்தல் செய்பவர்களின் வாகனங்கள் அரசுக்கு சொந்தமாகபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.