நிதி சேவைகளை பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது சுமார் 3 லட்சம் பொது சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் ஆதார், பான் கார்டு, ரயில் டிக்கெட், அரசு திட்டங்கள் உட்பட ஏராளமான சேவைகளை எளிமையாக பெற முடிகிறது. அந்தவகையில் மத்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 8000 பொதுசேவை மையங்கள் நியாயவிலை கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக10,000 பொதுசேவை மையங்கள் நியாயவிலை கடைகளுடன் இணைப்பதற்கான திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நிதி சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.