தமிழக அரசின் சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் இயங்கி வருகிறது. இத்திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் மையமாக தமிழக அரசு பல்வேறு சிறப்பான காரியங்களை செய்து வருகிறது. அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இத்திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறைபடுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் வாயிலாக சுமார் 69 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்தவர்கள் எவ்வாறு புதிதாக வரும் குடும்ப உறுப்பினரின் பெயரை சேர்ப்பது என்பதை இங்கு விரிவாக காணலாம். அதாவது திருமணத்திற்கு பின் ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். இல்லையெனில் தனி கார்டாக மாற்றி கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும் முதலில் ஏற்கனவே உள்ள பெயரை அந்த உறுப்பினரின் ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும்.
அவர்களின் பெயரை நீக்கிய பிறகு புதிகார்டில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சேர்க்க முடியும். இதை ஆன்லைன் மூலம் செய்து விடலாம். அதன்பின் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும், மேலும் இதிலும் தங்களது முகவரியை மாற்றவேண்டும். அதனை தொடர்ந்து திருத்தப்பட்ட ஆதார் அட்டையை ஆவணமாக சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரைசேர்த்து கொள்ளலாம். இதற்கிடையில் https://tnpds.gov.in/ இந்த லிங்கில் சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த அனைத்து சேவைகளும் இடம்பெற்று இருக்கின்றன.
இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தார் 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் முன்னாடி எல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் எனில், குழந்தைகளுக்கு பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதும் என்று கூறி இருந்தனர். ஆனால் தற்போது ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இதனிடையில் குழந்தைகளுக்கும் ஆதார்கார்டு மூலமாக ரேஷன் அட்டையில் பெயரினை சேர்த்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.