Categories
அரசியல்

குடும்ப அட்டைதாரர்களே…. ரேஷன் பொருள் வாங்கும்போது…. முக்கியமாக அப்டேட்…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இத்திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதையடுத்து இலவச ரேஷன் அரிசி திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுடைய நலன் கருதி முக்கியமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது FPS டீலர்கள் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் செயல் கருவி மூலம் பயனாளிகளுக்கு குறைவான ரேஷன் வழங்கப்படலாம் என்பதனால் கவனமாக இருக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர் இரண்டு e-POS சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு கருவிகளை பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. அப்படி இரண்டு கருவியைப் பயன்படுத்தினால் உடனடியாக அது குறித்து புகார் செய்ய வேண்டும்.

இல்லை எனில் உங்களுடைய ரேஷன் பொருட்கள் குறைக்கப்படலாம். பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு வகைகள் கிடைப்பது உறுதி செய்வதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்தவகையில் ரேஷன் கடைகளில் இனி எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் e-POS கருவிகளை எலக்ட்ரானிக் தராசுகளுடன் இணைக்கும் விதமாக விதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories

Tech |