நாடு முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்கு ஆதார் அட்டை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த வருடம் இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்தது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தபோது ரேஷன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் அமல்படுத்த டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையை ரேஷன் அட்டையுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும்செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.