குடும்ப அட்டை தேவைப்படும் குடும்பத்தினர் இனி எவ்வித சிரமமும் இல்லாமல் மிகவும் சுலபமாக விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்.
குடும்பத் தலைவரின் புகைப்படம்.
பய திற்காக குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.
நிரந்தர தொலைபேசி எண்.
வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று.
விண்ணப்பிக்கும் முறை:
புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
அது என் குடும்ப தலைவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்க.
பின்னர் குறிப்பிட்டுள்ள அளவில் உங்களது புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
அதன் பிறகு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவேற்ற வேண்டும். தொடர்ந்து கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.