தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. அவர்களுக்கும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் எந்த இடத்திலும் பொருட்கள் பெறலாம் என்ற முறை அமலில் உள்ளது. அதில் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை. முழுமையாக பொருட்கள் விநியோகம் நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தி பரவிய நிலையில் அமைச்சர் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories