Categories
மாநில செய்திகள்

குடும்ப கட்டுப்பாடுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்தால்…. இதை செய்யுங்க!…. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் வசித்து வரும் தனம் என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தனம் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2014-ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு மீண்டும் கர்ப்பம் தரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த தனம் தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நீதிபதி கிருஷ்ணசாமி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, “குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சில நேரங்களில் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. இந்த விஷயம் குறித்து மனுதாரருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க முடியாது” என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் குடும்ப கட்டுப்பாடு அறுவை செய்து கொண்டால் கர்ப்பம் தரிக்காது என்று முழுமையாக நம்பி இருக்கிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் கருவுற்றதால் இழப்பீடு பெறுவதற்கான உரிமை அவருக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் மூன்றாவது பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு வரையிலோ அல்லது 21 வயது வரையிலோ பாடப்புத்தகங்கள், கல்வி கட்டணங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக மாதம் ரூ.10,000 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் மனுதாரரின் மூன்றாவது குழந்தையையும் அரசு சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |