Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடும்ப கஷ்டம்” நான் சாக போகிறேன்…. நண்பர்களுக்கு தகவல்… குழந்தை பிறந்து 5வது நாள்… தந்தை எடுத்த முடிவு…!!

குழந்தை பிறந்து ஐந்தாவது நாளில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் அமைந்த சாமிதோப்பு அருகே உள்ள சோட்டபணிக்கன்  தேரிவிளையில் வசித்து வருபவர்  மாரியப்பன் . 31 வயதாகும் இவர் வீடுகளில் மார்பிள், டைல்ஸ் பதிக்கும் காண்டிராக்டராக தொழில் செய்து வருகின்றார் .கொரோனா நோய்த் தொற்றல் ஏற்பட்ட  ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதகாலமாக வேலையில்லாமல் தொழில் நஷ்டம் ஏற்பட்டது, அதில் குடும்ப செலவை எதிர்கொள்ள பணம் இல்லாததால் அவதிக்குள்ளானார்.

அதனால்  கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்த நிலையில் நேற்று காலை மாரியப்பன் வடக்கு தாமரைகுளம் பகுதியில் உள்ள கிராசிங் பகுதியிலிருந்து தன்னுடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் “எனக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளது புதிய தொழில்கள் இல்லாததால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார் .

அவர் எடுத்து சென்ற விஷமருந்தை குடித்துவிட்டு அங்கேயே மயங்கி  விழுந்து கிடந்தார். அங்கு வந்து நண்பர்கள் மயங்கிய நிலையில் கிடந்த மாரியப்பனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு , தென்தாமரைகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த அவருக்கு மனைவியும்(28), 1 1/2 வயதில் மகளும், பிறந்த ஐந்து நாட்களே ஆன ஒரு மகனும் உள்ளார்.

Categories

Tech |