தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி வாத்தியார்விளை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் மகேஷ்குமார் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை சரியான நேரத்தில் திருப்பி கொடுக்க இயலவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேஷ்குமாரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.