கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது .
ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிபோதையில் இருந்த விஜய் திடீரென 150 அடி உயரம் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விஜயிடம் பேச்சு கொடுத்தவாறு மின் கம்பத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.