குடும்ப தகராறில் 5 வயது மகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அடுத்த முதுகம்பட்டி தின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவர் மனைவி செந்தாமரை. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு லாவண்யா(7), மோனிகா (5) என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த செந்தாமரை இரண்டாவது மகள் மோனிகாவுடன் அதே பகுதியை சேர்ந்த மாது என்பவர் தோட்டத்திற்குச் சென்றார்.
அங்கிருந்த 30 அடி ஆழ கிணற்றில்தனது 5 வயது மகள் மோனிகாவை வீசி கொலை செய்து விட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் .அதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பென்னாகரம் காவல் துறைக்கும் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.அதைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து செந்தாமரை மற்றும் சிறுமி மோனிகா ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர் .அப்போது அங்கு திரண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.