குடும்ப தகராறில் மகளே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் வசித்து வரும் குடும்பம் ஒன்றில் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக தனது தந்தையை மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து வந்த அவர்கள் துப்பாக்கிச் சூடுபட்டு காயத்துடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபரை மீட்டு முதலுதவி அளித்து உள்ளனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற இயலவில்லை.
அதோடு காயங்களுடன் 18 வயதுடைய இளம் பெண்ணும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக தாம் தான் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டதாக 18 வயது மகள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.