Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் கணவன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் கோணம்குருசடி பகுதியில் டென்னிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டென்னிஸுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக இவருடைய  மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து டென்னிஸ் தனது மனைவியை பல முறை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் டென்னிஸ் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து டென்னிஸ் தூக்கிட்டு  தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டென்னிஸின் தாயார் விக்டோரியா ஆசாரிப்பள்ளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் டென்னிசின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |