தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதுவும் ஓணம் பண்டிகை காரணமாக காய்கறி தக்காளி போன்றவற்றின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதியும் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 70 வரை விற்பனையாகி வந்தது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் பண்ணை சுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.