Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000….. தமிழக அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குறித்து அமைச்சர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டத்து ஆவாரம்பட்டி யில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சட்டமன்ற தேர்தலின்போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது உங்கள் அரசு. மக்களுக்கான அரசு. இதில் யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது. கூட்டுறவு வங்கியில் கடன் கேட்டு வரக்கூடிய அனைவருக்கும் கடன் வழங்கப்படும்.  நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்கப்படும். இதில் ஏதேனும் குளறுபடி நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலும் கடன் கேட்டு வருபவர்களிடம் மற்ற வங்கியில் இருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. கடந்த திமுக ஆட்சியின்போது முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்க பணியில் சேர எந்த ஒரு லஞ்சமும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு வேலை கிடைக்கும் .தமிழகத்தில் பால் மாடுகளை வளர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு தேவையான தீவனத்திற்கான தொகையை அரசாங்கமே வழங்கும். குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை  முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப தலைவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |