Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடக்கம்…? வெளியான புது தகவல்…!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில் அந்தியோதயா அன்னயோஜனா முன்னுரிமை ஆகிய ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவராக இருந்தால், பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |