தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து, நகை கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என நேற்று அமைச்சராக பதவியேற்ற உதயநிதி தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் உடன் குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பார் என உதயநிதி தெரிவித்துள்ளார்.