Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உடனே வழங்க….. கமல்ஹாசன் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்த ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய, அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன் முதலில் முன் வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்.  இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக் கொண்டன.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை இருப்பினும், இந்த சிறிய தொகையாவது இல்லத்தரசிகளுக்கு கிடைக்கிறதே என்று தான் கருத வேண்டிய நிலையுள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |